திருச்சிக்கு 23-ம் தேதி வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு- மத்திய, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்…!
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான
கே.என்.நேரு தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் இன்று(19-11-2024) நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே. என்.நேரு பேசுகையில், கழகத் தலைவர் ஆணைக்கிணங்க வருகிற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற அனைவரும் முழுமூச்சாக பாடுபட வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) திருச்சிக்கு வருகை தரும் துணை முதலமைச்சரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழகத்தினர் அனைவரும் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிப்பது. துறையூரில் நடைபெறும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவ சிலை திறப்பு விழா நிகழ்ச்சியிலும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியிலும் கழக நிர்வாகிகள், முன்னோடிகள், செயல்வீரர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிப்பது. வருகின்ற நவம்பர் 27-ந்தேதி அன்று பிறந்தநாள் காணும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இக்கூட்டம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது.
கழகத்தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவிற்பிற்கிணங்க வருகிற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மற்றும் தேர்தல் பணிகளில் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிக்கு அயராது பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், கதிரவன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம், முன்னாள் மத்திய மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், நாகராஜன், கமால் முஸ்தபா ,காஜா மலை விஜய், ராம்குமார், இளங்கோ,
பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், தொழிலதிபர் ஜான்சன் குமார், தில்லைநகர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, அயலக அணி திருச்சி மாநகர அமைப்பாளர் துபேல் அகமது, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,
மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ், கவுன்சிலர்கள் கலைச்செல்வி, புஷ்பராஜ் ,மஞ்சுளா பாலசுப்பிரமணியன், ராமதாஸ், நிர்வாகிகள் அரவானூர் தர்மராஜன், பந்தல் ராமு, சர்ச்சில், ரியல் எஸ்டேட் நடராஜன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.