நடிகர் திலகம் சிவாஜி மற்றும் பின்னணி பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி…* திருச்சியில் ஏப்ரல் 14ம் தேதி நடக்கிறது!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய சிவாஜி-பிரபு, விக்ரம் பிரபு தலைமை ரசிகர் மன்றம் மற்றும் திருச்சி நியூ ராகாலயம் மற்றும் ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஃபெமினா ஹோட்டல் எதிரே உள்ள சீனிவாசா ஹாலில் ஏப்ரல் 14ம் தேதி மாலை 5 மணி அளவில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு சென்னை மாம்பலம் டாக்டர்.சிவாஜி ரவி தலைமை தாங்குகிறார். “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற பெயரில் நடைபெறும் இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலைஞர் டிவி புகழ் சென்னை ராஜா மற்றும் நியூ ராகாலயம் மெலோடிஸ் குழுவினர் பங்கேற்று பாடல்களை பாடுகின்றனர். இந்த இன்னிசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க சிவாஜி கணேசன் பாடல்கள் மட்டுமே பாடப்படுகின்றன. இதில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. நிகழ்ச்சியை வஜ்ரா மார்ட் பேரியக்க தேசிய தலைவர் மற்றும் ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை கௌரவ தலைவர் டாக்டர் எஸ்.வஜ்ரா ராம், நியூ ராகாலயம் ஏ.ஏ. ஜான் போஸ்கோ, ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் க.முத்து சூர்யா ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். இதுகுறித்த மேலும் தகவல்கள் பெற விரும்பினால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் இதுதான் : 98426 08366, 90801 45071
Comments are closed.