Rock Fort Times
Online News

திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய அரசு ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு…! (வீடியோ இணைப்பு)

தீபாவளியை போல கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 6 வரை கொண்டாடப்படுகிறது. மிக முக்கியமான நாளான திருவோணம் செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை வருகிறது. திருவிழா அத்த நாளில் தொடங்கி திருவோணத்தன்று முடிவடைகிறது.இது மன்னன் மகாபலி பூமிக்கு திரும்பியதைக் குறிக்கிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தின்போது, நடனமாடிய அரசு ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வயநாடு சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ஜுனைஸ் அப்துல்லா (46) என்ற ஊழியர், சக ஊழியர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்