திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் சீனிவாசன் (வயது 37). இவர் தனது பெற்றோரை சென்னையில் உள்ள சகோதரர் வீட்டுக்கு கொண்டு விடுவதற்காக சென்னை சென்றார்.பின்னர் திருச்சிக்கு நேற்று திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மேற்கூரைஓடு உடைக்கப்பட்டு மூன்று சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது. உடனே இது குறித்து சீனிவாசன் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பெயரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
