Rock Fort Times
Online News

திருச்சி-கல்லணை சாலையில் ஹோட்டல், டீக்கடை நடத்துவதில் போட்டா போட்டி-நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டை…* திமுக முன்னாள் நிர்வாகி கைது…! (வீடியோ இணைப்பு)

திருச்சி-கல்லணை சாலை, திருவளர்ச்சோலையில் சிவ.கண்ணன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் கடை அருகிலேயே மதன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இரு தரப்பினருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக அவ்வப்போது வாய் தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிவ.கண்ணன் அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து மதனை தாக்கியுள்ளனர். அப்போது மதன் அவரது மனைவி மைதிலி இருவரும் எதிர்த்து தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து சிவ.கண்ணனை கைது செய்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட சிவ.கண்ணன் 4ஏ திமுக முன்னாள் வட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்