Rock Fort Times
Online News

வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றிய பிரபல டிராவல்ஸ் நிறுவனம் ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…* திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மதுரையை சேர்ந்த பார்விமல் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட், விசா, டிராவல்ஸ் இன்சூரன்ஸ் மற்றும் உள்நாடு, வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லுதல் போன்றவற்றை செய்து கொடுத்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2024 ஏப்ரல் மாதம் ஐரோப்பிய சுற்றுலா அழைத்துச் செல்வதாக உறுதியளித்து செந்தில்குமரன், வரதராஜன், சுப்பிரமணியன் ஆகியோரிடம் தலா ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட தேதியில் அழைத்துச் செல்லாமல் இழுத்தடித்து வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மூவரும் தாங்கள் செலுத்திய தொகையை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், அந்த நிறுவனத்தினர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதனால், ஏமாற்றம் அடைந்த மூவரும் திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் 07-11-2025 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கு தொடுத்த மூவரையும் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய டிராவல்ஸ் நிறுவனம், மனுதாரர்களின் வழக்குசெலவு , மன உளைச்சலுக்கான நிவாரணம் சேர்த்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்தை 45 தினங்களுக்குள் செலுத்த நீதிபதி சேகர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் வழக்கறிஞர் ஸ்ரீ வத்சன் ஆஜராகி திறம்பட வாதாடினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்