ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் கைது…!
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (25). டாட்டா ஏசி டிரைவர். பிரவீனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதனை மறைத்து 14 வயது பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகூறி ஏமாற்றி திருமணம் செய்வதற்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அழகம்மை, உதவி ஆய்வாளர் கவிதா ஆகியோர் விசாரணை நடத்தி பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Comments are closed.