திருச்சி, புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழாவில் தேரை இழுத்துச் செல்வதில் இரு தரப்பினரிடையே பிரச்சனை- போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் மட்டும்தான் கோவில் மருளாளி ஆயிரக்கணக்கான ஆட்டின் ரத்தத்தை உறிஞ்சி குடிப்பார். இந்த நிகழ்ச்சி இன்று( மார்ச் 6) காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் வரை தொடர்ந்து நடைபெற்றது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
குட்டி குடித்தல் நிகழ்ச்சி முடிந்து அம்மன் வீதி உலா புறப்பட்டார். வழக்கம்போல் கோயில் நிர்வாகத்தினர் குழுமாயி அம்மன் தேரை வீதி உலாவாக இழுத்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், ஒரு தரப்பினர் நாங்கள் தான் அம்மன் தேரை இழுத்து செல்வோம் என தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால், ஒரு தரப்பினர் தேரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT…👇
Comments are closed.