தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்றைய தினம் (16-03-2025) பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்தார். அப்போது நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்த அவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஓம்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.