Rock Fort Times
Online News

வேங்கைவயலில் ஒருவர் கூட வாக்களிக்க வராததால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி…!

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2022ம் ஆண்டு மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக பலகட்டங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும் இதுவரை இவ்விவகாரம் தொடர்பாக யாரும் பிடிபடவில்லை. இந்நிலையில், இன்று மக்களவைத் தேர்தல் தொடங்கி நடக்கும் நிலையில் இறையூர் மற்றும் வேங்கைவயல் கிராம மக்கள் வாக்களிக்கக்கூடிய வாக்குச்சாவடியில் இதுவரை யாரும் வாக்களிக்காததால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்த வாக்குச்சாவடியை பதற்றமான வாக்குச் சாவடியாக கணக்கில் கொண்டு, துணை ராணுவம் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 549 வாக்காளர்கள் வாக்களிக்கக்கூடிய இந்த வாக்குச்சாவடியில் மதியம் 12 மணி வரை வேங்கைவயல் மற்றும் இறையூர் மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மக்கள் இந்த தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்