திருச்சி, பொன்மலை அருகில் துணிகர சம்பவம்: பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபருக்கு வலை…!
திருச்சி, கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பொன்மலை பகுதியில் காய்கறி வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, அந்த பெண்ணின் இரு சக்கர வாகனம் மீது மோதுவது போல வந்து நின்றார். இதனால், அந்தப் பெண் நிலை தடுமாறிய போது திடீரென்று அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு அந்த மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டார் . இதுகுறித்து பொன்மலை போலீசில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.