திருச்சியில் “பசுமை தமிழகம் சமூக நல அறக்கட்டளை” சார்பில் ஏழை மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித்தொகை வழங்கும் விழா…!
முன்னாள் ஜனாதிபதியும், இந்திய விஞ்ஞானியுமான மறைந்த அப்துல் கலாம் நினைவாக திருச்சி “பசுமை தமிழகம் சமூக நல அறக்கட்டளை” சார்பில் ஆண்டுதோறும் ஏழை மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இலவச மரக்கன்றுகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 10-ம் ஆண்டாக 29- 06-2025 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அருள் முருகன் கார்டனில் விழா நடைபெற்றது.
விழாவிற்கு எல்ஐசி முருகானந்தம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர்கள் என்.சத்தியமூர்த்தி, எஸ்.மகேஸ்வரன், பெரியசாமி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கினர். ஒரு சில மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் பாலமுருகன், நாகேந்திரன், செந்தில்குமார், ராம்குமார், கேசவன், பிரேம், ராமச்சந்திரன், இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த அறக்கட்டளை சார்பில் ஏற்கனவே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு புதுக்கோட்டை, முசிறி உள்ளிட்ட இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.