திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தியாகேசர் ஆலை துணை அஞ்சலகத்தின் கீழ் இயங்கும் எப்.கீழையூர் கிளை அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கனகலட்சுமி(32). இவர், வாடிக்கையாளர்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருந்து பணம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பாறை உட்கோட்டத்தில் பணிபுரியும் அருண் ஜெயசீலன்(54) என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் கனகலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்சலக பெண் ஊழியர் ஒருவர் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை கையாடல் செய்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.