Rock Fort Times
Online News

சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்தவர் மீது வழக்கு பாய்ந்தது…

திருச்சி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜய் என்பவர் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டறியும் பொருட்டு சமூக வலைதளமான YouTube மற்றும் Instagram -மை  கண்காணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது inba’s track என்ற பெயரில் ஒரு வாலிபர் @inba’s track என்ற id -யை பயன்படுத்தி ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுவது போல சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தில் TEXT வருவது போல mono-acting மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளது தெரிய வந்தது.
மேலும், இவரின் mono-acting வீடியோக்களை பார்க்கும்போது, வீடியோக்கள் அனைத்தும் அருவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமான வகையிலும் உள்ளது. பெண்களை பற்றி தவறாக சித்தரித்தும் mono-acting மூலம் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து Instagramல் 82,000 Followers, YouTubeல்- 1,93,000 subscribers உள்ளனா். இவரது வீடியோக்களைப் ஏராளமான குழந்தைகள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்க்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக மேற்படி நபா் மீது திருச்சி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்