திருச்சியில் உள்ள பிரபல ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் ரூ.பல லட்சம் மோசடி…- 2 ஊழியர்கள் மீது வழக்கு பாய்ந்தது…!
திருச்சி, ஒத்தக்கடை பகுதியில் பிரபல ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக இருப்பவர் பாலசுந்தரம். இவர் ஷோரூம் பொருள் இருப்பு மற்றும் விற்பனை போன்றவற்றை தணிக்கை செய்த போது முதல் தளத்தில் உள்ள பல்வேறு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. விற்பனை செய்யப்பட்ட அந்தப் பொருட்களுக்கான தொகை நிறுவன கணக்கில் சேரவில்லை. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஷோரூம் முதல் தள பொறுப்பாளர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கல்லுப்பட்டறை தெரு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் முத்துப்பாண்டி (வயது 30) என்பவர் உதிரி பாகங்களை விற்பனை செய்து கடை ஊழியர் அரியமங்கலம் ஈவிஆர் ரோடு பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (23) என்பவரது துணையுடன் தமது ஜிபே கணக்கில் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. அந்த வகையில் ரூ.பல லட்சம் மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.இதுகுறித்து பாலசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில், செசன்ஸ் கோர்ட் போலீசார் அரவிந்த் மற்றும் அப்பாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.