திருச்சி, பஞ்சப்பூர் பகுதியில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில், கார் புகுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள அக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். திருச்சி, பஞ்சப்பூர் பகுதியில் அனைவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே விராலிமலையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் . பெரியக்கா (45),. சுகன்யா (31) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பெரியக்கா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஒருவர் சிகிச்சையடைந்து வருகிறார். இது தொடர்பாக திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Comments are closed.