Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே 1000 ஆண்டுகள் பழமையான கற்சிலை கண்டெடுப்பு…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் தெற்கு வாசலின் அருகே பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அமரூத் பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான 9 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பழங்கால கற்சிலை தென்பட்டது. பின்னர், அந்த சிலை தோண்டி எடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் சமயபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் சரவணன், மண்ணச்சநல்லூர் தாசில்தார் பழனிவேல், சமயபுரம் கோவில் இணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த சிலையை பார்வையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பக்தர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த கற்சிலையை பயபக்தியுடன் வணங்கினர். பின்னர் அந்த சிலையை அதிகாரிகள் பாதுகாப்பாக எடுத்து வைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்