மழலைச்சொல் மாறாத குழந்தைகளையும் பெற்றோா்கள் பள்ளியில் சோ்க்கின்றனா்.2 அரை வயதிலே பிளே ஸ்கூலில் சோ்த்து விடுகின்றனா். 3 வயதில் பிரிகேஜியும் , 4 வயதில் எல்.கே.ஜிக்கும் அனுப்புகின்றனா். இதற்கான பள்ளிகள் ஆங்காங்கே நிறைய திறக்கப்பட்டிருக்கின்றன. எனவே குழந்தைகள் 5 வயதில் ஒன்றாம் வகுப்பு படிக்கின்றனா். இந்நிலையில் மத்திய கல்வித்துறை இன்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளது. அதில் குழந்தைகளுக்கு 6 வயது முடிந்த பிறகே ஒன்றாம் வகுப்பில் சோ்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் மழலையா் பள்ளியில் படிப்பதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.