Rock Fort Times
Online News

25ம் தேதி குரூப்2 முதன்மை தோ்வு.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்தோ்வு வரும் சனிக்கிழமை 25ம் தேதி நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தோ்வ மையங்களில்3680போ் இத்தோ்வினை எழுதவுள்ளனா். இப்பணிகளுக்கான 18 தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இப்போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வுமையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 6 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தோ்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வாளா்கள் தோ்வு மையங்ளுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தோ்வு எழுத வரும் தோ்வாளா்கள் கைபேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தோ்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை. கோவிட்19 நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தோ்வாணையத்தால் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவா் மா.பிரதீப்குமாா் தொிவித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்