Rock Fort Times
Online News

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்..

கலெக்டரிடம், விசுவ ஹிந்து பரிஷத் மனு..

திருச்சி மாவட்ட, கலெக்டர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ்சிடம், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் , கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு விதித்த பொது விதிகளின் படி பசு மற்றும் ஒட்டகம் முதலிய  விலங்குகள் அதற்குாிய இடங்களில் மட்டுமே வெட்டப்பட வேண்டும். இந்த விதிமுறை தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் சில நேரங்களில் இந்த விதி கடைபிடிக்கப்படுவதில்லை. வருகிற 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொது இடங்களில் , பசு மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் பலியிடப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் தவிர பொது இடங்களில் பசு மாடுகள் மற்றும் ஒட்டகம்  பலியிடப்பட உள்ளதாக தொியவருகிறது. இது பொது சுகாதார சீா்கேட்டிற்கு வழி வகுக்கும்.  ஆகவே நோய் தொற்றிலிருந்து பொது மக்களை காக்கும் பொருட்டு பசுமாடு மற்றும் விலங்குகளை அதற்குாிய இடங்களில் மட்டுமே வெட்டுவதற்க்கு வழி வகை செய்ய வேண்டும். பொது இடங்களில் விலங்குகள் வெட்டப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதில் பசு பாதுகாப்பு பொறுப்பாளர் சசிகுமார், கோட்ட பொறுப்பாளர் முருகேசன், பஜ்ரங்தள் பொறுப்பாளர் சப்தரிஷி, மாவட்ட துணைத் தலைவர்கள் சங்கர் ஜி , ராஜகோபாலன், மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட பசு பாதுகாப்பு பொறுப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் உடன் இருந்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்