மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் தனியார் கல்லூரி சார்பில் சிறுதானிய உணவுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய கண்காட்சி நடைப்பெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி சார்பில் சிறுதானிய உணவுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவுகள், சிறுதானிய பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியினை ஆச்சி மசாலா கல்வி குழும நிர்வாக அதிகாரி ஸ்டான்லி துவக்கி வைத்து கண்காண்சியினை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் நாகரீக வாழ்க்கையில் நாம் மறந்து போன நமது பழமையான உணவு பழக்க வழக்க முறைகளாக இருந்து வந்த சாமை,தினை,கேழ்வரகு,கம்பு, மற்றும் தானிய பயிர் வகைகள் குறித்து பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் வைக்கபட்டிருத்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 25 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 30க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் மற்றும் நமது பாரம்பரிய நாட்டு மருந்துகளான பிரண்டை,ஆவாரம்பூ,தூதுவேளை,நெல்லிக்கனி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கண்காட்சியினை கல்லுாாி முதல்வா் ரூபா, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Next Post