திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையத் முற்துசா மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் தரமாக உள்ளதா என இன்று காலை ( 19.06.2023 ) திடீர் ஆய்வு மேற்கொண்டாா் . பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின் தரம் சரியாக இருக்கிறதா, மாணவர்களுக்கு சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.