Rock Fort Times
Online News

திருச்சியில் பஸ்ஸின் உச்சியில் ஏறி நின்று நடனமாடிய 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு..

வீடியோ இணைப்பு...

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 46). அரசு பஸ் டிரைவர். இவர் சம்பவத்தன்று சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து உறையூர் பகுதிக்கு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது, எதிரில் கோவில் நிகழ்ச்சிக்காக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அப்போது சுப்பிரமணியம் பஸ்சை நிறுத்தி உள்ளார். அப்போது 2 வாலிபர்கள் பஸ் உச்சியின் மீது ஏறி நின்று ஒரு கட்சியின் கொடியை பிடித்தவாறு நடனம் ஆடினர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 வாலிபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்