தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் இடையே பிரச்சனை: ரூ.5 கோடி லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீடியோ ‘லீக்’ ஆனது…!(வீடியோ இணைப்பு)
தஞ்சாவூரில் உள்ள ஏ டூ இசட் தனியார் மருத்துவமனையின் பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினர் மீது தொடரப்பட்ட எஸ்சி/எஸ்டி வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாறன், ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக அண்மையில் குற்றச்சாட்டு
எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பணியிடை நீக்கமும் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை மாவட்டம், திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் சுகுமாறன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்த சுகுமாறன் தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தஞ்சையில் உள்ள இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் வைத்து மருத்துவமனை உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் என்பவர் ரூ.5 கோடி கொடுக்கும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.