அரசு ஊழியர்கள் கடன் மற்றும் முன்பணம் பெறும் நடைமுறையை எளிமையாக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் முன்பணத்தை பெற 6 ஆண்டுகள் தகுதி தேவை இல்லை, தகுதிகாண் பருவம் முடிந்திருந்தாலே அரசு ஊழியர்கள் முன்பணத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கணினி முன்பணம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன முன்பணம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்ற நிதித்துறை அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 6 வருடம் நிறைவு செய்திருந்தாலே முன்பணம் வாங்க முடியும் என்ற நடைமுறையை திருத்தி தகுதிகாண் பருவம் நிறைவு செய்திருந்தாலே விண்ணப்பிக்கலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்ட சபை கூட்டத்தொடரின் போது இதுகுறித்த அறிவிப்பை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு இருந்தார். தற்போது அதை செயல்படுத்தும் விதமாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Comments are closed.