Rock Fort Times
Online News

“வாராளே… வாராளே… சமயபுரத்தாளே…”* மறைந்த இசையமைப்பாளர் தேவா கடைசி காலத்தில் இசையமைத்த அருள் மணக்கும் ஆன்மீக பாடல் வைரல்… (ஆடியோ பாடல் இணைப்பு)

தமிழ் திரையுலகில் நானூறு திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து புகழ் பெற்றவர் தேனிசை தென்றல் என்றழைக்கப்பட்ட தேவா. இவரது மறைவு தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு பக்கம் இளையராஜா, மறுபக்கம் ஏ.ஆர். ரகுமான் என இருவரும் இசைப்பிரியர்கள் உள்ளங்களில் கொடிகட்டி பறந்த காலத்தில் தனது தனித்துவமான கானா திரையிசை பாடல்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் தேவா. “கானாகத்த மீனு வாங்கி”, திருப்பதி, ஏழுமலை வெங்கடேசா” போன்ற தனது தனித்துவமான பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றார். அதுமட்டுமல்லாமல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திருக்கு மாஸ் ஓப்பனிங் பாடல்கள் அமைத்து அவரது திரை உயர்வுக்கு முக்கிய காரணமாகவும் விளங்கினார். திரையிசை பாடல்கள் ஒரு பக்கம் என்றால், இவர் இசையமைத்த ஆன்மீக அம்மன் பாடல்கள் மறுபக்கம் சிறந்த இடம் பிடித்தது. தேவாவிற்கு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேல் எந்த அளவுக்கு ஈடுபாடு இருந்ததோ அதே அளவிற்கு திருச்சி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ஆன்மீக திருத்தலங்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் மீதும் அளவற்ற பக்தி இருந்தது. இதனாலேயே, தனது கடைசி காலத்தில் “வாராளே.. வாராளே… சமயபுரத்தாளே…” என்கிற சமயபுரம் மாரியம்மனின் அருள் மணக்கும் ஆன்மீக பாடலை இசையமைத்து தனது சொந்த குரலில் பாடினார். இப்பாடலுக்கான முயற்சிகளை கடந்த திமுக ஆட்சி காலத்தில் சமயபுரம் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த வி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் கோயில் நிர்வாகம் எடுத்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட இப்பாடல் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்