Rock Fort Times
Online News

லண்டன், ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய் மளிகைக் கடைகளுக்கும் சென்று விலைவாசியை கேட்டறிய வேண்டும்…* மு.க.ஸ்டாலின்..! 

தமிழகத்தில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,

“முதல்வர் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார், போகட்டும். அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து, உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் ‘நார்மலாக’ இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்குப் பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்