ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கநாயகி தாயாரை வழிபட்டனர்..!
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் போது முதல் 3 நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியாகவும் அம்பாள் அருள்பாலிப்பார். இந்நிலையில்
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று இரவு தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளான திங்கட்கிழமை மாலை ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து தாயாரை வழிபட்டனர். ஸ்ரீரங்கம் கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத் ஆர்கன் வாசித்தும் வணங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Comments are closed.