Rock Fort Times
Online News

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்:* த.வெ.க.அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம்!

தமிழகத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின்வெட்டு, நேற்று தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது. இதனை தீர்க்க ஒரு யூனிட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து ரூ.35 கொடுத்து வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையின் முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், குறைந்த விலை முந்தைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, தற்போது ஒரு யூனிட்டை 35 ரூபாய்க்குப் கொள்முதல் செய்வது என்பது நிர்வாகம் மற்றும் திட்டமிடலில் உள்ள கடுமையான திறமையின்மையையே காட்டுகிறது, அல்லது மிகப்பெரிய ஊழலாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமேதான்…” என்று பதிவிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில், ரூ.5 க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ரூ.35 செலவழித்து த.வெ.க அரசு வாங்குகிறது. நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என த.வெ.க வாக்குறுதியளித்தது. திமுக ஆட்சியில் வெறும் ரூ.5. 40 முதல் ரூ.9.50 வரை ஒப்புதல் பெற்ற மின் கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று? என பதிவித்துள்ளார்.

அன்புமணி,

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள பதிவில், மின்சாரத்தை யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்; தமிழக அரசின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பே முயன்றிருந்தால் குறைந்த விலையில் மின்சாரம் வாங்கியிருக்க முடியும்; மின்சாரம் யூனிட் ரூ.35 என்ற விலை இதுவரை இல்லாத உச்சமாகும் என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்