Rock Fort Times
Online News

முதல்வர் விஜயின் பேச்சை கண்டித்து திருச்சியில் திமுகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்… * முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது !

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது முன்னாள் முதலமைச்சர்கள் மு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் முரசொலி மாறன் உள்ளிட்டோரை கொச்சைப்படுத்தி பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜயை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில இன்று(12-09-2026) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக சார்பில் காந்தி மார்க்கெட், மரக்கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜயை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன்,மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கே.என்.சேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜய், மணிமேகலை ராஜபாண்டி, பகுதி செயலாளர்கள் மார்க்கெட் பகுதி மரக்கடை பாபு, அரியமங்கலம் நீலமேகம், மலைக்கோட்டை மருந்து கடை மோகன், பாலக்கரை ராஜ் முஹம்மது, அண்ணா நகர் கமால் முஸ்தபா, தில்லை நகர் கொடாப்பு நாகராஜன், கே.கே.நகர் மணிவேல், ஸ்ரீரங்கம் எம்.ஏ.எஸ் மணி, ராம்குமார், திருவெறும்பூர் பகுதி சிவக்குமார், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாச பெருமாள், செந்தில், வழக்கறிஞர் செந்தில், முசிறி ராமச்சந்திரன், காட்டுக்குளம் கணேசன் மற்றும் பகுதி, வார்டு, கிளை சார்பில் பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட
ஏராளமானோர் கலந்து கொண்டு விஜய்க்கு எதிராக குரல் எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்