Rock Fort Times
Online News

கரூர் அருகே பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 15 மாணவர்கள் காயம்…!

கரூர் மாவட்டம், தரகம்பட்டி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சில மாணவர்கள் பள்ளி வாகனத்தில் அழைத்து வரப்படுகின்றனர். அந்தவகையில் இன்று(09-09-2026) காலை கடவூர், பாலவிடுதி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி பேருந்து பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று பள்ளி பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். அதில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த 4 மாணவிகளுக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாலவிடுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மற்றும் மணப்பாறை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்