Rock Fort Times
Online News

‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டம் உசிலம்பட்டியில் செப்.25-ல் தொடக்கம்?

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தவெக அறிவித்திருந்தது. அதன்படி, ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், செப். 25-ம் தேதி மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய், இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கான ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தொடங்கப்படும். இந்த திட்டத்தை முதலமைச்சர் செப்டம்பர் 15ம் தேதி துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் லண்டன் பயணம் காரணமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 25ம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்