Rock Fort Times
Online News

பிரதமர் வேட்பாளர் சர்ச்சை: தவெக -காங்கிரஸ் இடையே எந்த முரண்பாடும் இல்லை…* அமைச்சர் நிர்மல்குமார்..!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முதல்வர் விஜய்
முன்னிறுத்தப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது . இதற்கு காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி வருகின்றனர். இதனால், தவெக- காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்க இன்னும் நேரம் இருக்கிறது. தவெக – காங்கிரஸ் இடையே எந்த முரண்பாடும் இல்லை. தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள். அதனால் துறைரீதியாக ஒரு முடிவெடுக்கும் போது அனைத்து மாவட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்தும் ஆலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும். இது ஏழை, எளிய மக்களுக்கான அரசு, மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியான நேரத்தில் நாங்கள் செய்வோம். வருகிற தேர்தல்களில் திமுக – அதிமுக – பாஜக எல்லாம் சேர்ந்து கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தாலும் தவெகவை எதுவும் செய்ய முடியாது” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்