Rock Fort Times
Online News

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்…* தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்! 

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் அசோசியேசனின் இரண்டாம் ஆண்டு  பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், திருச்சி மேலபுதூரில் உள்ள கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி குடோன் ஹாலில், இன்று(02-09-2026) நடைபெற்றது. கூட்டத்திற்கு அசோசியேஷனின் மாநில தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் இன்ஜினியர் வி.வீரமணி வரவேற்புரை ஆற்றினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் மலேசியா மணி ஆண்டறிக்கை வாசித்தார். மாநில கூடுதல் செயலாளர் டி.பக்கிரிசாமி, மாநில அவைத்தலைவர் எஸ். அமீருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு, தொழிலதிபர் ஆர்.வி.ராம் பிரபு, பனானா லீஃப் எம். மனோகரன், சுமதி பப்ளிகேஷன் ஆர்.வி.ஹரிஹரன், தாசில்தார் பி.ஆர்.சற்குணன், டெல்லி கிச்சன் சமூக ஆர்வலர் பி. முருகேசன், மாநில சட்ட ஆலோசகர் எஸ். கே.சங்கர் மற்றும் எம்.விவேகானந்தன், வி.வெங்கடேஷ், பி.கண்ணையன், ஏ. அப்துல்காதர், ஜே.பி.ஆர். கணேஷ் ராகவன், அந்தோணி, ராஜா, பி. பால்ராஜ், ஏ. ஆனந்த், எஸ்.சீனிவாசன் எம்.அகிலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில், தமிழகம் முழுவதும் இருந்து மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- கட்டிட அனுமதிக்கு சதுர அடிக்கு 40 ரூபாய் வசூல் செய்துவந்ததை தமிழக அரசு ரத்துசெய்து இருப்பதை  இக்கூட்டம் முழு மனதோடு வரவேற்பதோடு நன்றி தெரிவித்துக் கொள்வது. மணல் செங்கல் டைல்ஸ் சிமெண்ட் கம்பி மற்றும் ஜல்லி போன்ற அத்தியாவசிய கட்டுமான பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழை, எளிய மக்களும் தாங்கள் சேமித்த பணத்தை கொண்டு வீடு கட்டும் கனவு நனவாகாமல் பாதியிலேயே நிற்கிறது. இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் உபரி நிலங்களை முறையாகக் கண்டறிந்து அரசு துறையே நேரடியாக தரமான அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டுமனை பிரிவுகளை ஏற்படுத்தி ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்க உரிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையை நம்பி முகவர்கள்,  புரமோட்டார்ஸ், இன்ஜினியர்கள், மேஸ்திரிகள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பங்கள் என தமிழ்நாட்டில்  லட்சக்கணக்கானோர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு எவ்வித சமூக பாதுகாப்பும், மருத்துவ காப்பீடு ஓய்வூதிய திட்டமும் இல்லை. ஆகவே, மத்திய அரசு ரியல் எஸ்டேட் துறைக்கு நலவாரியம் அமைத்து விபத்து காப்பீடு, கல்வி உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் போன்ற சலுகை வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் முகவர்களை போல ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் உழைப்பாளர்களை அரசு அதிகாரப்பூர்வமாக ‘நில முகவர்’ என்று அங்கீகரித்து அரசாணை வெளியிட வேண்டும். நடுத்தர குடும்பத்தினர் மற்றும் ஏழை, எளிய மக்கள் சொந்த வீட்டு மனை வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் சிறப்பு திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்