Rock Fort Times
Online News

“நேபாளத்தில் நாங்கள் பத்திரமாக இருக்கிறோம்”…* திருச்சியில் இருந்து சென்றவர்கள் உறவினர்களுக்கு வாய்ஸ் மெசேஜ்…!

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழந்து உள்ளனர். ஏராளமானவர்களை காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் அந்த நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 பேர் அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சிக்கி தவித்து வருகின்றனர்.
அவர்களில் 20 பேர் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், மீதமுள்ள 37 பேரின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், திருச்சி உறையூர், கே.கே.நகர் மற்றும் தில்லைநகர் பகுதிகளில் இருந்தும் சிலர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கு பத்திரமாக இருப்பதாகவும், தங்களது குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆடியோ மெசேஜ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன . இதனால், அவர்களது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்