நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க முதல்வர் விஜய் நடவடிக்கை: டெல்லி விரையும் 4 அமைச்சர்கள்…!
நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று(27-08-2026) அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில், தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அவர்களை பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக 4 அமைச்சர்களை டெல்லி செல்ல முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

Comments are closed.