Rock Fort Times
Online News

“கிளைமாக்ஸ்” சரியில்லை இந்த படம் ஓடாது என்று கூறிய உதயநிதிக்கு சுடச்சுட பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு…!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடும் நடைமுறை குறித்து எழுந்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “படம் நன்றாக இருந்தால் மக்கள் பொறுமையாக இருந்து கடைசி வரை கிளைமாக்ஸ் பார்ப்பார்கள்; ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த படம் ஓடாது, நன்றாக இருக்காது என்பதால் முன்பே கிளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல் இருக்கிறது” என கிண்டலாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் வன்னி அரசு, “இப்போதெல்லாம் படத்திற்கு இரு கிளைமாக்ஸ் இருக்கிறது, அவை படத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும்; நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை” என்று சுடச்சுட பதிலளித்து அவையில் விவாதத்தை சுவாரசியமாக்கினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்