விவசாயிகளையும், பொதுமக்களையும் காக்கும் வகையில் சென்னை, பரந்தூரில் புதிய விமான நிலையம் கொண்டு வரப்பட மாட்டாது என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளியிடப்பு செய்தனர். இந்த விவகாரம் குறித்து
செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,
பரந்தூர் விமான நிலையம் குறித்து 55 விதியின் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று(24-08-2026) ஏற்கப்படும் என கூறி இருந்தனர். முதலமைச்சர்110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதால் பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்து
விட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னையில் 2-வது விமான நிலையம் தேவை. பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது. விமான நிலையம் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது. சென்னையை சுற்றி மற்ற இடங்களில் விமான நிலையம் அமைவதில் சிக்கல்கள் உள்ளன. பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர்தான் பரந்தூரை விமான நிலையத்துக்காக தேர்வு செய்தோம். ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் பரந்தூர் விமான நிலையம் கட்டாய தேவையாக உள்ளது.
பரந்தூர் விமான நிலையத்தை நம்பியே எலக்ட்ரானிக் நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வந்தன. பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் எத்தகைய பொருளாதாரா விளைவு ஏற்படும் என்பது குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.