Rock Fort Times
Online News

டாஸ்மாக் முறைகேடு: செந்தில்பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு…!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநரான விசாகன் ஐஏஎஸ், முன்னாள் மண்டல மேலாளர் ராம துரைமுருகன்,  பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ரத்தீஷ் ராஜ், மூலனூர் கார்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை நடந்த டாஸ்மாகில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பார்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் போக்குவரத்து ஏலங்களில் முறைகேடு நடந்திருப்பதாகவும், விதிமீறல்கள் நடந்திருப்பதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 17.27 கோடி மற்றும் ரூ. 13.58 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதேபோல், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட வெளிநாட்டு மதுபானங்களுக்கு ரூ.500 வரை கூடுதலாகவும், இதர மதுபானங்களுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை சட்டவிரோதமாக மதுபிரியர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்