Rock Fort Times
Online News

திருச்சியில் நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை… மாவட்ட கலெக்டரிடம் பால் முகவர்கள் முறையீடு !

திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் முகவர்களாக ஏறக்குறைய 450 பேர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு பால் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தினமும் முகவர்களுக்கு வழங்கப்படும் பாலில் 200 முதல் 250 லிட்டர் வரை குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் ஆவின் பால் விநியோகம் செய்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. பால் தட்டுப்பாட்டால் முகவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுகிறது. பாலை அதிகளவு சென்னைக்கு அனுப்பி வைப்பதால் திருச்சியில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து அதிக அளவு பணம் கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் ஆவினுக்கு வரும் பால் குறைகிறது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து முகவர்களையும் ஆவின் பால் வாடிக்கையாளர்களையும் காக்க வேண்டும் என வலியுறுத்தி ஆவின் பால் விற்பனை முகவர்கள் ஒற்றுமை நல சங்கத்தினர் இன்று( ஜூலை 27) திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்