Rock Fort Times
Online News

திருவண்ணாமலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு…!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒரு பக்கமாக படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்தவுடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வந்து வழிபட்டு செல்கின்றனர்.  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்குப் பிள்ளையார் கோயிலில் சிக்கி, ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் என்ற பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். நேற்று அதே இடத்தில் சிக்கிய ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் கடும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். இவ்வாறு பக்தர்கள் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு இடுக்கு பிள்ளையார் கோவிலில் உடல் பருமனாக உள்ளவர்கள், வயதானவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்