திருச்சி மாவட்டம், பாலக்குறிச்சி புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 69வது விளையாட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பிரியா மொராய்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பள்ளியின் முன்னாள் மாணவர் அருண்குமார் கவுரவ விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். 100மீ, 200மீ, 400மீ ஓட்டப்பந்தயம் மற்றும் அஞ்சல் ஓட்டங்களில் மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஜேம்ஸ், கபிரியேல், மாண்போர்ட் என்ற மூன்று இல்லங்களில் ஜேம்ஸ் இல்லம் சாம்பியன் பட்டம் வென்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அருட்.சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் மற்றும் அருட்சகோதரர்கள், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

Comments are closed.