கடந்த 2025 செப்டம்பர் மாதம் தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு பயணம் கரூரில் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்ப்பாராத வகையில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் மரணம்டைந்தனர். இவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லவும் 32 பேரின்குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கும் தமிழக முதல்வர் விஜய் இன்று கரூரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கரூர் அட்லஸ் வளாகத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கும் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசினார்.அப்போது., “கரூர் சம்பவம் என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத வலியையும், வேதனையும் கொடுத்துள்ளது. இதை எப்போதும் மறக்கவே மாட்டேன். இந்த கரூர் சம்பவத்தில் என்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ரசிகர்களையும், அவர்களின் குடும்பத்தையும், சிறு குழந்தைகளையும் இழந்துவிட்டோம். நாம் இதுவரை அரியலூர், திருச்சி போன்ற பல இடங்களில் மக்கள் சந்திப்பு பயணங்களை நடத்தினோம். அதில் அரியலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்திய போது பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக இருக்கிறது இங்கு வரவேண்டாம் என போலீசார் முன்கூட்டியே எச்சரித்தார்கள்.

பாதுகாப்பு நலன் கருதி நானும் பெரம்பலூரில் நடைபெற வேண்டிய மக்கள் சந்திப்பு கூட்டத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பினேன். அதேபோல கரூருக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நான் வரும்போது இங்கு பணியில் இருந்த போலீசார் கள நிலவரம் குறித்து என்னிடம் சரியாக தகவல் தெரிவிக்கவில்லை. கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்த போதும் போலீசார் மிகவும் அசால்டாக இருந்து விட்டனர். இந்த கூட்ட நெரிசனுக்கு போலீசாரின் கவனமின்மையே காரணம். அப்போது ஆட்சியில் இருந்த மேலிடத்திற்கு பயந்தும், பணிந்தும் கூட்டத்திற்கு நடுவே என்னை அனுமதித்தார்கள். நானும் போலீசார் மேல் நம்பிக்கை வைத்து கூட்டத்திற்கு சென்றேன். அதன் பிறகு நடைபெற்ற அசம்பாவிதம் என் நெஞ்சில் ஆறாத வடுவாக மாற்றிவிட்டது.பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக இருந்ததை முன்கூட்டியே கணித்த போலீசார், கரூரில் கூட்டம் அதிகமானதை ஏன் முன்கூட்டியே கணிக்கவில்லை? காவல்துறை நினைத்திருந்தால், கூட்டத்தை ரத்து செய்து இருக்கலாம். அப்படி செய்திருந்தால் இவ்வளவு பெரிய பெருந்துயர் நடந்திருக்காது என காட்டமாக பேசினார்.

Comments are closed.