ரீல்ஸ் எடுத்து மிரட்டும் நபர்கள்: ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம்…!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்போர் மற்றும் சிகிச்சை பெருவோரை யாரும் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிடக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. அதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர்கள் மற்றும் செவிலியர்களை வீடியோ எடுத்து மிரட்டும் நோயாளிகளின் உறவினர்கள் செயலை கண்டித்து, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்று(06-07-2026) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல மூன்று முறை நடந்துள்ளதாகவும், இதனால் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் பணி செயல்திறன் பாதிக்கப்படுவதாகவும், இதனை தவிர்க்கும் பொருட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர் .

Comments are closed.