Rock Fort Times
Online News

‘ஆதிதிராவிடர் நலத்துறை’, ‘சமூக நீதித்துறை’ என பெயர் மாற்றம்!

தமிழக அரசில் இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரில் ஒரு துறையே செயல்பட்டு வந்தது. இதற்கு அதே பெயரில் அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது புதிதாக பதவியேற்றுள்ள த.வெ.க.அரசு ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்துள்ளது. மேலும், இன்று(மே 22) அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசுக்கு சமூக நீதித்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை’, ‘சமூக நீதித்துறை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்