தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் நேற்று வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நாளை(ஏப்.19) திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2 மணியளவில் திருச்சிக்கு வருகை தரும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிறுத்தம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர் அவர், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தொகுதிக்குள் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள 27 நிபந்தனைகளுடன் மாநகர காவல் துறையினர் அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.