பிரபலமான கோவில்களின் பிரசாதங்களை வெளியூர்களில் இருக்கும் பக்தர்கள் தபால் மூலம் பெறும் வகையில் புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியுள்ளது. இதன்மூலம் பக்தர்கள் இந்தியாவில் எங்கிருந்தும் திருக்கோயில் பிரசாதத்தை அஞ்சல் வாயிலாக பெற்று கொள்ளலாம். மேலும் திருக்கோயில் தகவல்களை பக்தர்கள் எளிதாக அறியும் வகையில் திருக்கோயில் செயலி தொடங்கப்பட உள்ளது. இந்த இரண்டு திட்டத்தையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகா்பாபு தொடங்கி வைத்தார்.
இந்தச் செயலியைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அஞ்சல் வழி பிரசாத சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எங்கிருந்தும் கோவில் பிரசாதங்களை பெற்று கொள்ளலாம். இன்னும் மூன்று மாதத்தில் உலகில் எந்த நாட்டில் இருந்தும் திருக்கோவில் பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர் கோவில் பிரசாதத்தை காஷ்மீரில் இருப்பவர்கள் இனி வாங்க முடியும். எந்தெந்த ஊர்களில் எந்தெந்த கோவிலில் எந்தெந்த உணவு சிறப்போ, அதுவே பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும். கூடுதலாக பிரசாத கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. கூடுதலாக கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிதம்பரம் நடராஜர் கோவிலின் முறைகேடு குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்போம். உச்சநீதிமன்றமே அறங்காவலர் நியமனம் குறித்த இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளது. முதல் கட்டமாக அடுத்த மூன்று மாதத்தில் 48 முதுநிலை கோவில்களை மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மாற்ற உள்ளோம்’ என்று தெரிவித்தார்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 956
Comments are closed, but trackbacks and pingbacks are open.