அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சத்யன் (வயது 33). தொழிலதிபரான இவர் மனைவி லிங்கேஸ்வரி மற்றும் குழந்தை சாய்தினா ஆகியோருடன் கடந்த புதன்கிழமை ( 17.05.2023 ) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.வழியில் இரவு 10.30 மணி அளவில் திருச்சி காவிரிப்பாலம் சஞ்சீவி நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் காரை நிறுத்தி, காருக்குள் குழந்தையை தூங்க வைத்துவிட்டு உணவருந்தினார். பின்னர் அவர் காரை எடுக்க முயன்றபோது அங்கு முகமூடி மற்றும் கருப்பு சட்டை அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரது காரில் ஏறியுள்ளார். பின்னர் தொழிலதிபரின் மகள் சாய்தினாவின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டி உடனடியாக காரை எடு இல்லையென்றால் குழந்தையைக் கொன்று விடுவேன் என தொழில் அதிபரை மிரட்டினாராம்.
இதனைக் கண்டு பயந்து போன குழந்தையின் தாய் சத்தமிட்டார். உடனே உணவக காவலாளி மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர். இதை கண்ட அந்த மர்மநபர் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கோட்டை போலீசில் சத்யன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உணவகத்திலிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் அந்த மர்ம நபர் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ பதிவெண்ணைக்கொண்டு, அரியமங்கலம் தொழிற்பேட்டை காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்டாலின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் இரவில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 956
Comments are closed, but trackbacks and pingbacks are open.