திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளராக நவல்பட்டு விஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், விஜய் உருவ பொம்மையுடன் தொகுதி முழுவதும் வலம் வந்து ஓட்டுவேட்டையாடி வருகிறார். இதற்கு பொதுமக்கள் இடையே குறிப்பாக இளம் வாக்காளர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்த நூதன பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஒவ்வொரு தொகுதிக்கும் வர இயலாது என்பதால் இந்த நூதன பிரச்சாரத்தை நவல்பட்டு விஜி கையில் எடுத்துள்ளார். நவல்பட்டு விஜி திமுகவைச் சேர்ந்தவர். அந்தக் கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.