திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் இனிகோ இருதயராஜுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் . அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தொகுதி மக்களுக்காக எந்த உழைப்பும் கொடுக்காமல், மாயத் தோற்றத்தின் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கும் சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதி மேலும் வளர்ச்சி அடைய, வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து இனிகோ இருதயராஜை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Comments are closed.